பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது

5 அக்டோபர் 2026, 1:22 PM
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது

புத்ராஜெயா, அக். 5 — பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ள போதிலும், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 54(1) பிரிவின் அடிப்படையில், எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத் தொகுதி காலியிடத்தை நிரப்புவதற்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என மக்களவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி எந்தவித நிபந்தனையும் இன்றி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.