டேசா மெந்தாரியில் ஐந்து வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது!

4 ஆகஸ்ட் 2026, 3:52 AM
டேசா மெந்தாரியில் ஐந்து வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது!

ஷா ஆலம், ஆகஸ்ட் 4: பெட்டாலிங் ஜெயா, டேசா மெந்தாரி பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐந்து வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களும் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கான விண்ணப்பம் பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும்," என்று பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷம்சுடின் மாமட் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பகுதியில் ஐந்து கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக நம்பப்படும் சந்தேக நபர்களின் கூட்டத்தைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.