தாமான் யுனிவர்சிட்டியில் பாதசாரிகளுக்கான கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன

28 ஆகஸ்ட் 2026, 6:08 AM
தாமான் யுனிவர்சிட்டியில் பாதசாரிகளுக்கான கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன

ஷா ஆலாம், ஆகஸ்ட் 28: பெட்டாலிங் ஜெயா, தாமான் யுனிவர்சிட்டியில் பொதுமக்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்த கூடுதல் உள்கட்டமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதில் பாதசாரிகளுக்கான நடைபாதை மற்றும் சாலைக் கடக்கும் வசதியை அமைப்பதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் தெரிவித்துள்ளார்.

ஜாலான் எஸ்எஸ்3/29 பகுதியில் 400 மீட்டர் நீள நடைபாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடந்து, அப்பகுதியில் மேலும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொள்ளும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், அப்பகுதியில் நிலவும் உள்கட்டமைப்பு பிரச்சனைகளைக் கையாள்வதற்கும் PSP திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிம் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, ஜாலான் எஸ்எஸ்1/19 பகுதியில் மோசமான நிலையில் உள்ள கூடைப்பந்து மைதானத்தை மேம்படுத்துவதற்காக அப்பகுதியில் PSP நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, சீ பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டு கட்டடங்களில் கூரை நீர்வழிக் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிம் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.