மாணவர் மரணம்: இரண்டாவது சந்தேக நபரின் தடுப்புக் காவல் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

5 அக்டோபர் 2026, 8:51 AM
மாணவர் மரணம்: இரண்டாவது சந்தேக நபரின் தடுப்புக் காவல் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

சிரம்பான், அக். 5 — செப்டம்பர் 25ஆம் தேதி கோலா பிலாவில் படிவம் 2 மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபரின் தடுப்புக் காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய அந்த ஆண் இளைஞரின் தடுப்புக் காவல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கோலா பிலா மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிடெண்டன் முஸ்தபா ஹுசின் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 302-ன் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரும் 16 வயதுடையவராவார். அவருக்கான தடுப்புக் காவல் அக்டோபர் 8ஆம் தேதி வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை புதிய தகவல்கள் எதுவும் இல்லை. ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக முஸ்தபா ஹுசின் தெரிவித்தார்.

முன்னதாக, நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மட் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 69 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.