பள்ளிகளில் பிரம்படி தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கல்வி அமைச்சர்

5 அக்டோபர் 2026, 7:59 AM
பள்ளிகளில் பிரம்படி தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கல்வி அமைச்சர்

ஷா ஆலாம், அக். 5 — பள்ளிகளில் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதற்கான தண்டனை முறைகளில் ஒன்றான பிரம்படி தண்டனை ஒருபோதும் ரத்து செய்யப்படவில்லை.

நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு அது தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தண்டனை விதிக்கப்படலாம். அதுவும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தண்டனை நடவடிக்கைக்கும் தெளிவான காரணம் இருக்க வேண்டும். மேலும், நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க அது முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்,” என்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் பிரம்படி உள்ளிட்ட ஒழுக்க நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறைகள் குறித்து பள்ளிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள கல்வி அமைச்சு அவ்வப்போது விதிமுறைகளை மேம்படுத்தும்.

இதனிடையே, பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை கையாளும் வகையில் 11 கூடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஃபட்லினா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.