சிலாங்கூரின் 9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை எட்ட செப்பாங் முக்கியப் பங்காற்றுகிறது

5 அக்டோபர் 2026, 3:31 AM
சிலாங்கூரின் 9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை எட்ட செப்பாங் முக்கியப் பங்காற்றுகிறது

செப்பாங், அக். 5 — இந்த ஆண்டு 9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் இலக்கை அடைவதில், செப்பாங் மாவட்டம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்பாங் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் தங்களுக்கென தனித்துவமான சுற்றுலா அம்சங்களை கொண்டிருப்பதால், அவற்றை ஒருங்கிணைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் விளம்பரப்படுத்த முடியும்.

இதனை சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழா 2026 (SMFF26) நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் முக்கிய இடங்களில் செக்கின்சான் மற்றும் கோலா குபு பாரு ஆகியவையும் இடம்பெறுவதாக இங் சுய் லிம் குறிப்பிட்டார்.

இதனுடன், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காக்கள் மற்றும் அரச நகரமான கிள்ளானின் பல்வேறு சுற்றுலா அம்சங்களும் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருவதாக அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் நெருக்கடியால் அப்பகுதியிலிருந்து சிலாங்கூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட 9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைவதில் மாநில அரசாங்கம் தொடர்ந்து நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, இந்த ஆண்டு சிலாங்கூர் முழுவதும் 90க்கும் மேற்பட்ட சுற்றுலா சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சிலாங்கூர் சுற்றுலா கண்காட்சி, சிலாங்கூர் மெகா உணவுத் திருவிழா, சிலாங்கூர் காபி திருவிழா மற்றும் சிலாங்கூர் நெல் வயல் திருவிழா ஆகியவை மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நிகழ்ச்சிகளில் அடங்குகின்றன. இவற்றுடன் மேலும் பல நிகழ்ச்சிகளும் ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு வருகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.