ஷா ஆலாம், ஆகஸ்ட் 26: செப்பாங் சாலாக் மெர்சு அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டன.
அத்திட்டம் தற்போது இறுதிக்கட்ட கண்காணிப்பில் இருப்பதாக சிலாங்கூர் மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒருங்கிணைப்பின் மூலம் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனினும், தேசிய நீர் சேவை ஆணையமான SPAN தொடர்பான விவகாரம் மட்டுமே தற்போது நிலுவையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அந்த விவகாரம் முழுமையாகத் தீர்க்கப்பட்ட பின்னர், CCC சான்றிதழைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடைமுறைகள் இறுதி செய்யப்படும்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சாலாக் மெர்சு அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் நிறைவுபெற்று, உரிமையாளர்களின் காத்திருப்புக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது







