36.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் சிலாங்கூர் முதலிடம்

15 செப்டெம்பர் 2026, 9:40 AM
36.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் சிலாங்கூர் முதலிடம்

ஷா ஆலாம், செப்.15 — மலேசியா கடந்த 2025ஆம் ஆண்டு 290.1 மில்லியன் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை பதிவு செய்துள்ளது.

இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.5 விழுக்காடு அதிகமாகும் என மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்தது.

அதில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளைப் பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 36.4 மில்லியன் மக்கள் சிலாங்கூருக்கு வந்துள்ளனர்.

சிலாங்கூரைத் தொடர்ந்து கோலாலம்பூர் 35.1 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், பேராக் 23.6 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதனிடையே, 2025ஆம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலா தொடர்பான செலவினமும் கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு சுற்றுலா செலவினம் 13.6 விழுக்காடு உயர்ந்து, 121.3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக அத்துறை தெரிவித்தது.

மாநில அளவிலும் தேசிய அளவிலும் சுற்றுலா செலவின வருவாய்க்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் பிரிவாக தொடர்ந்து ஷாப்பிங் திகழ்கிறது.

2025ஆம் ஆண்டு தேசிய அளவில் ஷாப்பிங் மூலம் மட்டும் 44.8 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளது.

மாநில வாரியாகப் பார்க்கும்போது, கோலாலம்பூர் 7.9 பில்லியன் ரிங்கிட் வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் 6.7 பில்லியன் ரிங்கிட்டையும், சரவாக் 3.6 பில்லியன் ரிங்கிட்டையும் பதிவு செய்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, 2025ஆம் ஆண்டு மலேசியாவின் உள்நாட்டு சுற்றுலாத் துறைக்கு வலுவான வளர்ச்சியைக் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது.

2026ஆம் ஆண்டில் சிலாங்கூருக்கு ஒன்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு மாநில அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.