ஷா ஆலாம், அக். 5 — சிலாங்கூரின் இன்று காலை ஜோஹான் செத்தியா பகுதியில் மட்டுமே காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) தகவலின்படி, இன்று காலை 10 மணியளவில் அங்கு காற்று மாசுக் குறியீடு (API) 153 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனிடையே, கோலாலம்பூரின் செராஸ் பகுதியில் 152 ஆகவும், புத்ராஜெயாவில் 152 ஆகவும் API பதிவாகியுள்ளது.
மேலும் நான்கு பகுதிகளில் இன்று காலை ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவானது. ஜோகூரில் லார்க்கின் மற்றும் பாசிர் கூடாங் பகுதிகளில் தலா 154 ஆகவும், பத்து பஹாட்டில் 153 ஆகவும், நெகிரி செம்பிலானின் நீலாயில் 124 ஆகவும் API பதிவாகியுள்ளது.
அதேவேளை, நாடு முழுவதும் 60 பகுதிகளில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியிருந்தது. அவற்றில் சிலாங்கூரைச் சேர்ந்த ஐந்து பகுதிகளும் அடங்கும்.
இதனிடையே, நல்ல காற்றுத் தரம் பதிவான ஒரே பகுதி கெடா மாநிலத்தின் லங்காவியாகும். அங்கு API 31 ஆகப் பதிவாகியுள்ளது.







