கன மழையால் செப்பாங்கில் F1 பந்தயம் தொடங்க தாமதம்

4 அக்டோபர் 2026, 8:07 AM
கன மழையால் செப்பாங்கில் F1 பந்தயம் தொடங்க தாமதம்

செப்பாங், அக் 4 : செப்பாங் அனைத்துலக பந்தய தளப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, ஃபார்முலா ஒன் (F1) பஹ்ரைன் கிராண்ட் பிரி பந்தயம் தொடங்குவது தாமதமாகியிருக்கிறது.

இப்பந்தயம் பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

பந்தயத்தின் நிர்வாக அமைப்பான FIA, அடுத்த 10 நிமிடங்களுக்கு வானிலையில் எந்த முன்னேற்றமும் இருக்காது எனக் கூறி, பந்தய தளத்தின் நிலவரத்தைக் கண்டறிய மருத்துவக் காரை அனுப்பி வைத்தது.

பந்தயத் தளத்தைச் சுற்றி "அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதாக" மருத்துவக் கார் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, தற்போதைய வானிலை பந்தயத்தைத் தொடங்குவதற்கு உகந்ததாக இல்லை என்று FIA தெரிவித்தது.

ரெட் புல் (Red Bull) அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், தகுதி சுற்றுகளுக்குப் பின்னர், இப்பருவத்தில் தனது பந்தயத்தை முதல் இடத்தில் இருந்து தொடங்குவதற்கான இடத்தைப் பிடித்தார்.

ஃபெராரி அணியின் லூயிஸ் ஹாமில்டன் அவருக்கு அடுத்தபடியாக முன் வரிசையில் பந்தயத்தைத் தொடங்குகிறார்.

மெர்சிடிஸ் அணியின் கிமி அந்தோனெல்லி மூன்றாவது இடத்தில் இருந்து பந்தயத்தைத் தொடங்குவார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.