F1 பந்தயத்தை முன்னிட்டு RM 17.5 மில்லியன் ஒதுக்கீட்டில் செப்பாங்கில் சாலைத் தர உயர்வுப் பணிகள்

25 ஆகஸ்ட் 2026, 6:42 AM
F1 பந்தயத்தை முன்னிட்டு RM 17.5 மில்லியன் ஒதுக்கீட்டில் செப்பாங்கில் சாலைத் தர உயர்வுப் பணிகள்

செப்பாங், ஆகஸ்ட் 25 - செப்பாங் மாவட்டம் நெடுகேயுள்ள சாலைகளின் தரத்தை உயர்த்தும் பணிகளுக்காக ஒரு கோடியே 75 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் F1 போட்டி நடைபெறும் செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தை நோக்கிச் செல்லும் முக்கியப் பாதைகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

FT26, FT27, FT29 உள்ளிட சில சாலைகளைத் தரம் உயர்த்த ஒரு கோடியே 60 லட்சமும், B48 சாலையை மேம்படுத்த 15 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக, செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அய்மான் அதிரா சாபு தெரிவித்தார்.

F1 கார் பந்தயத்தின் போது, போக்குவரத்து சுமுகமாக இருக்க , சாலைத் தரம் உயர்த்தும் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மத்தியிற்குள் முழுமைப் பெற்றுவிடுமென எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

செப்பாங், கம்புங் புக்கிட் பங்கோங், அல் உலும் மசூதி சதுக்கத்தில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.