செப்பாங் F1 கார் பந்தயம் : ராபிட் கேஎல்-லின் இலவசப் பேருந்துச் சேவை

24 செப்டெம்பர் 2026, 12:01 PM
செப்பாங் F1 கார் பந்தயம் : ராபிட் கேஎல்-லின் இலவசப் பேருந்துச் சேவை

ஷா ஆலாம், செப் 24 - செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடைபெறும் பஹ்ரெய்ன் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை முன்னிட்டு, ராபிட் கேஎல் நிறுவனம், இலவச 'ஷட்டல்' பேருந்துச் சேவையை வழங்கவிருக்கிறது.

அச்சேவைக்காக, 95 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். முக்கிய இடங்களில் இருந்து பந்தயம் நடைபெறும் பகுதிக்கான சுமூகமானப் போக்குவரத்தைச் உறுதிச் செய்வதற்காக, அந்த இலவசச் சேவை ஏற்படுத்தப்படும்" என ராபிட் கேஎல் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

  • கே.எல்.ஐ.ஏ 2-வது முனையம், ஒன்றாவது தளம் ( KLIA Terminal 2 bus hub, Level 1 )

  • கே.எல்.ஐ.ஏ மிட்சூய் பஸ் முனையம் ( KLIA Mitsui bus hub)

  • டி-வில்லெஜ், பெர்சியாரான் மில்லினியா 2, பண்டார் பாரு என்ஸ்டெக் ( De-Village, Persiaran Millenia 2, Bandar Baru Enstek)

    ஆகிய இடங்களில் இந்த இலவச ராபிட் கே.எல் பேருந்துச் சேவையைப் பெறலாம்.

அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து 4-ஆம்தேதி வரையில் காலை மணி 7-இல் இருந்து நள்ளிரவு மணி 12 வரையில் இந்த பேருந்துச் சேவை வழங்கப்படும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.