யொங் பெங் பள்ளி மாணவி கொலை : மாணவருக்கு 6 நாள் தடுப்புக் காவல்

4 அக்டோபர் 2026, 5:05 AM
யொங் பெங் பள்ளி மாணவி கொலை :  மாணவருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
யொங் பெங் பள்ளி மாணவி கொலை :  மாணவருக்கு 6 நாள் தடுப்புக் காவல்

ஷா ஆலாம், அக் 4 -ஜோகூர்,பத்து பகாட், யொங் பெங் இடைநிலைப் பள்ளியில் 4-ஆம் படிவ மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 16 வயது மாணவர் 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டார்.

அந்த மாணவர் நேற்று மாலை யொங் பெங் பகுதியில், பத்து பகாட் மாவட்ட போலீஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவினரால் கைது செய்யப்பட்டார் என, அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையை முழுமைப் பெற உதவ, தடுப்புக் காவலுக்காக, அந்த மாணவரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதியளித்தது.

அச்சம்பவம் கொலை என்ற வகைப்படுத்தப்பட்டு, குற்றவியல் சட்டம் 302-வது செக்க்ஷன் கீழ் விசாரிக்கப்படுவதாக டத்தோ அப் ரஹ்மான் அர்சாட் கூறினார்.

பாதிக்கப்பட்ட 16 வயது மாணவி ஐரீன் சோஃபியா மொஹம்மட் கைரூல் ஃபைசால் , சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் மண்டபத்தில், தரையில் விழுந்து கிடந்த நிலையில் நேற்று மாலை மணி ஐந்தரை அளவில் கண்டெடுக்கப்பட்டார்.

நீண்ட நேரமாகியும் தனது பேத்தி வீடு திரும்பாததை அடுத்து, அவரது பாட்டி பள்ளிக்குச் சென்று தேடியதைத் தொடர்ந்து, அம்மாணவி பலவீனமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

காய்ந்த ரத்தக் கறை, அடிக்கப்பட்டதற்கான வீக்கங்கள் அந்த மாணவியின் உடலில் காணப்பட்டன. அருகில் உடைந்த பூ சாடியும் இருந்தது.

அம்மாணவி சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.