பத்து பஹாட் நிலநடுக்கம்: அதிர்வுகள் சிலாங்கூர் உட்பட பிற பகுதிகளிலும் உணரப்பட்டன

22 செப்டெம்பர் 2026, 3:15 PM
பத்து பஹாட் நிலநடுக்கம்: அதிர்வுகள் சிலாங்கூர் உட்பட பிற பகுதிகளிலும் உணரப்பட்டன

கோலாலம்பூர், செப்.22 — இன்று மாலை ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் அதிர்வுகள் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பத்து பஹாட்டிலிருந்து சுமார் 27 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்திருந்ததாகவும் MetMalaysia குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் தொடர்பான நிலைமையைத் தொடர்ந்து MetMalaysia கண்காணித்து வருகிறது.

அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் தகவல்களைப் பதிவு செய்வதற்காக அத்துறையின் கேள்வித்தாளை நிரப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.