பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம்

22 செப்டெம்பர் 2026, 10:06 AM
பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம்

பத்து பஹாட், செப். 22 — இன்று மாலை பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் அதிர்வுகள் பத்து பஹாட் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்தது.

மாலை 4.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் பத்து பஹாட்டிலிருந்து 27 கிலோமீட்டர் தென்மேற்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

நிலநடுக்கத்திற்குப் பின்னரான நிலைமையை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அதேவேளையில், தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உணரப்படும் நில அதிர்வுகள், சுமத்ரா மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் ஏற்படும் வலுவான நிலநடுக்கங்களின் தாக்கத்தாலும் ஏற்படக்கூடும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.