சிலாங்கூர் TAWAS: 21,000 பேருக்கு RM1,500 கல்வி உதவித்தொகை

3 அக்டோபர் 2026, 9:34 AM
சிலாங்கூர் TAWAS: 21,000 பேருக்கு RM1,500 கல்வி உதவித்தொகை
சிலாங்கூர் TAWAS: 21,000 பேருக்கு RM1,500 கல்வி உதவித்தொகை
சிலாங்கூர் TAWAS: 21,000 பேருக்கு RM1,500 கல்வி உதவித்தொகை

கிள்ளான், அக் 3 - தாவாஸ் (TAWAS) எனப்படும் சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய நிதியின் முதல் குழுவைச் சேர்ந்த 21,000 பேருக்கு, தலா 1,500 ரிங்கிட் வழங்கும் திட்டத்திற்காக சிலாங்கூர் மாநில அரசு 3 கோடியே 10 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

இதுவரை அந்த நிதிக்கு தகுதியுடையவர்களில் சுமார் 13,000 பேர் மட்டுமே அந்த உதவியைப் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளனர்.

மீதமுள்ள 8,000 பேர் பலர் தங்களின் முகவரியையோ அல்லது தொலைபேசி எண்களையோ மாற்றியிருப்பதால், அவர்களைத் தொடர்புகொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

இதனால் விடுபட்டவர்களைக் கண்டறிந்து அடுத்த சில மாதங்களில் இந்தத் தொகையைச் சென்றடையச் செய்வதற்கான விளம்பரப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இன்று இங்குள்ள கே.எஸ்.எல் (KSL) மாநாட்டு மையத்தில் நடைபெற்ற, தவாஸ் (TAWAS) 'அனாக் ஹராப்பான்' அறுவடைத் திட்டம் (TUAH) மற்றும் பயனாளிகளுக்கு 1,500 ரிங்கிட் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

படம்: மீடியா சிலாங்கூர்

தகவல்கள் தெரியாமல் போனவர்களோ அல்லது வேலைப்பளு காரணமாகப் பதிவு செய்யத் தவறியவர்களோ இந்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, 2008-ஆம் ஆண்டில் தங்களின் குழந்தைகளை TAWAS திட்டத்தில் பதிவு செய்த பெற்றோர், உடனடியாகத் தங்களின் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி சேவை மையங்களையோ அல்லது சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய வாரிய (YAWAS) அலுவலகத்தையோ தொடர்புகொண்டு தங்களின் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

படம் : மீடியா சிலாங்கூர்

கடந்த 2008 முதல் சேமிக்கப்பட்டு வந்த இந்த நிதி, 2021 ஆம் ஆண்டு முதல் 'சிலாங்கூர் அட்வான்ஸ்' திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு 7% முதல் 8 % வரையிலான லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

இதன் காரணமாக, அடுத்து வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான நிதி, கையிருப்பில் உள்ளதாகவும், ஆண்டுதோறும் 21,000 முதல் 25,000 வரையிலான புதிய பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகை தடையின்றி வழங்கப்படும் என்றும் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 03-5481 8800 என்ற எண்ணிலோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரியிலோ YAWAS அதிகாரப்பூர்வப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.

படம்: மீடியா சிலாங்கூர்

ஆரம்பத்தில், சிலாங்கூர் குழந்தைகள் தங்களின் 18 வயதை அடையும் போது நிதிப் பலன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, YAWAS அமைப்பின் மூலம் TAWAS திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் பின்னர் ANAS திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.

இப்புதிய திட்டம், பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்கான ஆயத்தப் பணியாக தேசிய கல்விச் சேமிப்புத் திட்டத்தின் (SSPN) கீழ் ஆரம்பச் சேமிப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.