ஷா ஆலாம், ஜூலை 9 - எஸ்.பி.எம் முடித்த சிலாங்கூரின் TAWAS-தாவாஸ் (Tabung Warisan Anak Selangor ) நிதியின் உறுப்பினர்கள், பயிற்சி முடித்தவுடன் வேலையிட உத்தரவாதத்தை வழங்கும், சூரிய மின்தகடுகளைப் பொருத்தும் பாடத்திட்டத்தை இலவசமாக மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த இலவச பயிற்சித் திட்டம் சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டு மைய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக யாவாஸ்-YAWAS (Yayasan Warisan Anak Selangor ) அறநிதியின் தலைமை செயல்முறை அதிகாரி கன் பெய் நெய் தெரிவித்தார்.

இப்பயிற்சித் திட்டம் 18 வயதை எட்டிய எஸ்.பி.எம் முடித்த தாவாஸ் உறுப்பினர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
அத்திட்டத்தின் கீழ்,இவ்வாண்டு 200 -இல் இருந்து 300 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பங்கேற்பாளர் சேர்க்கை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், ஆர்வமுள்ளோர் தமது தரப்பை தொடர்பு கொள்ளலாம் என கன் பெய் நெய் தெரிவித்தார்.







