ஆசிய விளையாட்டு: தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர் மலேசிய மகளிர் ஸ்குவாஷ் அணியினர்

2 அக்டோபர் 2026, 7:34 AM
ஆசிய விளையாட்டு:  தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர் மலேசிய மகளிர் ஸ்குவாஷ் அணியினர்
ஆசிய விளையாட்டு:  தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர் மலேசிய மகளிர் ஸ்குவாஷ் அணியினர்

கோலாலம்பூர்,செப் 2: ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஸ்குவாஷ் (squash) குழு பிரிவில், மலேசிய அணி ஹாங்காங் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

ஐச்சி-நகாயா (Aichi-Nagoya) ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியா வென்றுள்ள ஏழாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

இதன் மூலம் மலேசியா தனது இலக்கான ஆறு தங்கப் பதக்கங்களை விட கூடுதலாகப் பெற்று சாதனை படைத்துள்ளது.

முதல் ஆட்டத்தில் மலேசியாவின் ஐஃபா அஸ்மான் (Aifa Azman), ஹாங்காங்கின் டொமாட்டோ ஹோவை (Tomato Ho) 11-9, 11-9, 12-10 என்ற கணக்கில் வீழ்த்தி மலேசியாவை முன்னிலைப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது ஆட்டத்தில், ஹாங்காங்கின் சான் சின் யுக் (Chan Sin Yuk), உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான மலேசியாவின் எஸ். சிவ சங்கரியை 11-7, 9-11, 9-11, 11-5, 11-7 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடையச் செய்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.

எனினும், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில், ஐஃபாவின் தங்கை ஐரா அஸ்மான் (Aira Azman), ஹாங்காங்கின் லீ கா யீயை (Lee Ka Yi) 11-9, 11-5, 11-4 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி, மலேசியாவிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இதற்கு முன்னதாக, ஹாங்சோ 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மலேசியா இதேபோன்று ஹாங்காங்கை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் பிரிவில் RM80,000 மற்றும் குழு பிரிவில் RM20,000 என தனது சிறப்பான பங்களிப்பிற்காக சிவ சங்கரிக்கு மொத்தம் RM100,000 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.