நகோயா, செப். 27 – மலேசியாவின் தேசிய ஸ்குவாஷ் நட்சத்திரம் சிவசங்கரி சுப்பிரமணியம், அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில், இந்தியாவின் அனஹத் சிங்கை 11-4, 11-4, 11-7 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சிவசங்கரி வெற்றி பெற்றார்.

2022ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் தங்கப் பதக்கத்தை சிவசங்கரி மீண்டும் கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி வாய்ப்பையும் அவர் உறுதி செய்துள்ளார்.
சிவசங்கரியின் வெற்றியுடன், இப்போட்டியில் மலேசியா நிர்ணயித்திருந்த ஆறு தங்கப் பதக்க இலக்கும் எட்டப்பட்டது.







