ஆசிய விளையாட்டில் மலேசியாவிற்கு மேலும் 3 தங்கம்:பிரதமர் பாராட்டு

2 அக்டோபர் 2026, 2:09 PM
ஆசிய விளையாட்டில் மலேசியாவிற்கு மேலும் 3 தங்கம்:பிரதமர் பாராட்டு

கோலாலம்பூர்:, அக் 2 - அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூலம் மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற மலேசிய வீரர்களின் சிறந்த ஆற்றலைப் பாராட்டி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

2010 குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் படைத்த மலேசியாவின் தங்கப் பதக்க சாதனையை ஈடு செய்ய தேசியக் குழுவினர் போராடி வருகின்றனர்.

இவ்வேளையில், இந்த சமீபத்திய வெற்றிகள் மலேசியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்திருப்பது குறித்து பிரதமர் தமது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

"இன்று தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்," என்று அன்வார் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று தங்கப் பதக்கங்களில் முதலாவது பதக்கத்தை ஆண்கள் கெய்ரின் சைக்கிளோட்டப் போட்டியில் தேசிய வீரர் டத்தோ முகமட் அசிசுல்ஹஸ்னி அவாங் வென்றார்.

அதனைத் தொடர்ந்து, ஐஃபா அஸ்மான், எஸ். சிவசங்கரி, ஐரா அஸ்மான் மற்றும் ரேச்சல் அர்னால்ட் ஆகியோர் அடங்கிய மலேசிய பெண்கள் ஸ்குவாஷ் குழுவினர் , 2-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி தங்கம் வென்றது.

அதையடுத்து, இங் ஈன் யோவ், சஞ்சய் ஜீவா, சி. அமீஷன்ராஜ் மற்றும் முகமது ஷஃபிக் கமல் ஆகியோரைக் கொண்ட மலேசிய ஆடவர் ஸ்குவாஷ் குழுவினர் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி மற்றொரு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

மலேசியா தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது தங்கப் பதக்கத்தை நோக்கி நகரும் வேளையில், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் தேசிய வீரர்களின் வெற்றிக்காக மலேசியர்கள் அனைவரும் தொடர்ந்து பிரார்த்திக்குமாறு அன்வார் கேட்டுக்கொண்டார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.