ஷா ஆலாம், அக். 1: சிலாங்கூரில் எட்டு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலை எச்சரிக்கையில் உலு லங்காட், உலு சிலாங்கூர், கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், சிப்பாங் மற்றும் கோலா லங்காட் ஆகிய எட்டு மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
இதுதவிர, கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர், சரவாக், சபா, லாபுவான் ஆகிய மாநிலங்களுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது







