சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்து அறிவிக்கும் நோட்டிஸ் வழங்கப்படவில்லை: எம்ஏசிசி

1 அக்டோபர் 2026, 8:04 AM
சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்து அறிவிக்கும் நோட்டிஸ் வழங்கப்படவில்லை: எம்ஏசிசி

கோலாலம்பூர், அக். 1: முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்து விவரங்களை அறிவிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) எந்தவொரு நோட்டிஸ் வழங்கவில்லை என அதன் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இன்று தெரிவித்தார்.

சரவணனின் மகனும் சொத்து அறிவிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் MACC தனது அதிகார வரம்புக்குள் செயல்பட்டு, அந்தச் சிறுவனுக்கு அறிவிப்பு வழங்க வேண்டாம் என முடிவு செய்ததாக அப்துல் ஹலிம் கூறினார்.

சட்டத்தில் வயது தொடர்பாக குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றும், மாறாக உறவினர்கள் அல்லது தொடர்புடையவர்கள் குறித்தே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சரவணன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் சிலருக்கு முன்னதாக சொத்து அறிவிப்பு தொடர்பான நோட்டிஸ் வழங்கப்பட்டது.

எனினும், சரவணனின் சில பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருவதால், அவர்களால் MACC-க்கு நேரில் வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

MACC தலைமையகத்தில் அச்சிறுவன் இருந்தது, அவருக்கு நோட்டீஸ் வழங்குவதற்காக அழைக்கப்பட்டார் என்று அர்த்தமல்ல. பெற்றோருடன் துணையாகவே அந்தச் சிறுவன் அங்கு வந்திருந்ததாகவும் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

நோட்டிஸ் பெற்ற நாளிலிருந்து சொத்து விவரங்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாதக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், ஏதேனும் காரணத்தால் அந்தக் கால அவகாசம் போதுமானதாக இல்லாவிட்டால், நியாயமான காலத்திற்கு அதனை நீட்டிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.