கோலா லங்காட்டில் கண்காணிப்பு நடவடிக்கை; 4 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன

15 ஆகஸ்ட் 2026, 2:44 AM
கோலா லங்காட்டில் கண்காணிப்பு நடவடிக்கை; 4 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன

ஷா ஆலாம், ஆகஸ்ட் 15 — கோலா லங்காட் மாவட்டத்தில் ஆற்றுநீர் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் நான்கு நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன.

பல்வேறு விதிமீறல்களைக் கண்டறிந்த கோலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL), சம்பந்தப்பட்ட வணிக வளாகங்களுக்கு இந்த நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது.

சிஜாங்காங் மற்றும் தெலுக் பங்லிமா காராங் பகுதிகளில் கடந்த ஜூலை 27ஆம் தேதி இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுச்சூழல் துறை (JAS) மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (LUAS) ஆகியவற்றுடன் இணைந்து MPKL இந்த நடவடிக்கையை நடத்தியது.

மேலும், இந்த நடவடிக்கையில் MPKL-இன் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை (JPSPKP), அமலாக்கத் துறை மற்றும் உரிமம் வழங்கும் துறை ஆகியவையும் இணைந்திருந்தன. மக்கள் பிரதிநிதி மன்றம் (MPP) மண்டலம் 1-ஐச் சேர்ந்த உறுப்பினரும் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்கள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், உரிமம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என MPKL தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.