2,000க்கும் மேல் அபராத நோட்டீஸ்களை வெளியிட்டது சொக்சோ

22 செப்டெம்பர் 2026, 9:45 AM
2,000க்கும் மேல் அபராத நோட்டீஸ்களை வெளியிட்டது சொக்சோ

ஷா ஆலம், செப். 22 — கடந்த ஜூலை மாதம் முதல் 2,000க்கும் மேற்பட்ட அபராத நோட்டீஸ்களை சொக்சோ வெளியிட்டுள்ளது.

முதலாளிகள் தங்கள் நிறுவனங்களையோ அல்லது ஊழியர்களையோ சமூகப் பாதுகாப்பு அமைப்பில் பதிவு செய்யாதது மற்றும் கட்டாய பங்களிப்புகளைச் செலுத்தாதது தொடர்பில் இந்த நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969, வேலைவாய்ப்பு காப்புறுதிச் சட்டம் 2017 மற்றும் சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 ஆகியவற்றின் கீழ் முதலாளிகளுக்கு இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக சொக்சோ செயல்பாடுகளுக்கான துணை தலைமை நிர்வாக அதிகாரி அஸிருவான் அரிஃபின் தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் ‘Ops Kesan 2.0’ நடவடிக்கையின் கீழ் 159 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பசார் செனி, பிரிக்பீல்ட்ஸ், பூடூ மற்றும் பண்டார் பாரு அம்பாங் ஆகிய இடங்களும் அடங்கும்.

சில முதலாளிகள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு கட்டாயம் என்பதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றனர்.

அதேவேளையில், சில ஊழியர்களே தங்களுக்கு சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு செலுத்த வேண்டாம் என முதலாளிகளிடம் கேட்டுக்கொண்ட சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அஸிருவான் கூறினார்.

தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளையும் சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

சமூகப் பாதுகாப்பு வழங்கும் நன்மைகள், எதிர்பாராத சூழ்நிலைகளில் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை வழங்குவதாக அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, புகார் அளிப்பவர்களின் அடையாளங்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.