சிலாங்கூர் பட்ஜெட் 2027: விலை உயர்வுப் பிரச்சனைக்கு முன்னுரிமை அவசியம்

1 அக்டோபர் 2026, 5:00 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2027: விலை உயர்வுப் பிரச்சனைக்கு முன்னுரிமை அவசியம்

ஷா ஆலாம், அக். 1: சிலாங்கூர் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவு, பொருட்களின் விலை உயர்வு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான செலவினங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் தேவைகள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வார் என தாம் நம்புவதாக KDEB Waste Management Sdn Bhd (KDEBWM) நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் தெரிவித்தார்.

KDEBWM தொடர்ந்து மாநில அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, மக்களுக்கு நன்மையளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பங்களிக்கும் என்றும் ரம்லி தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டரசு அரசாங்கம் தாக்கல் செய்யவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்திலும் மக்களின் தேவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதன் மூலம் மக்களின் நலனும் வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் ரம்லி நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.