ஷா ஆலாம், செப்.30 — சிலாங்கூரில் 4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை, பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை கோம்பாக், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணாம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களாகும்.
இதற்கிடையில், கோலாலம்பூர், கெடா, பினாங்கு, பேராக், பகாங், ஜோகூர் மற்றும் சபா மாநிலங்களிலும் இந்த மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிடும் அண்மைக்கால வானிலை தகவல்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







