மியன்மார் அகதிகள் விவகாரம்: மலேசியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை – அன்வார்

30 செப்டெம்பர் 2026, 3:33 AM
மியன்மார் அகதிகள் விவகாரம்: மலேசியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை – அன்வார்

கோலாலம்பூர், செப்.30 — மியன்மார் அகதிகள் விவகாரத்தை கையாளும் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் மலேசிய மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மியன்மாருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், மொத்தம் 5,000 அகதிகளை தன்னார்வ முறையில் கட்டம் கட்டமாக அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அதன்படி, இரு நாடுகளும் இணைந்து ஒப்புக்கொண்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர், முதல்கட்டமாக 1,476 அகதிகள் இன்று தாயகம் திரும்பும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

அத்துடன், அகதிகள் தொடர்பான பிரச்சனையைச் சமாளிக்க அமலாக்க நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் அகதிகளின் சொந்த நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் அரசாங்கம் மேலும் திட்டமிட்ட அணுகுமுறையை முன்னெடுத்து வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.