காவல்துறை அதிகாரியை கத்தியால் தாக்கிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

30 செப்டெம்பர் 2026, 2:52 AM
காவல்துறை அதிகாரியை கத்தியால் தாக்கிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஷா ஆலாம், செப்.30 — கடந்த சனிக்கிழமை காஜாங், பத்து 9 காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரியைக் கத்தியால் தாக்க முயன்றதாக 54 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அந்த ஆடவர் குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவசரப்பட்டு இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சனிக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் பணியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

காவல் நிலையத்திற்கு வந்த சந்தேக நபர், புகார் அளிக்க வந்தவர் போல் காணப்பட்டுள்ளார்.

திடீரென தனது மோட்டார் சைக்கிளிலிருந்து கத்தியை எடுத்த காவல்துறை அதிகாரியை தாக்க முயன்றுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபர் குடும்பப் பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக நம்பப்படுவதாக நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

இந்த ஆடவர் இன்று காலை காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.

கொலை முயற்சி தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் 307ஆவது பிரிவின் கீழும், அரசுப் பணியாளருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக 353ஆவது பிரிவின் கீழும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.