20 ஆண்டுகளைக் கடந்த சிலாங்கூர் சாலைகள் 2027-இல் மேம்படுத்தப்படும்

30 செப்டெம்பர் 2026, 1:50 AM
20 ஆண்டுகளைக் கடந்த சிலாங்கூர் சாலைகள் 2027-இல் மேம்படுத்தப்படும்

ஷா ஆலாம், செப்.30 — சிலாங்கூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள பழைய சாலைகளின் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடுத்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதனை மாநில உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

பயனாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட சாலைகளில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்.

அதேவேளை, அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இத்தகைய பகுதிகளில் சாலை மேற்பரப்பு விரைவாக சேதமடையும் வாய்ப்பு அதிகம் என்றும் இஷாம் தெரிவித்தார்.

நவம்பரில் தாக்கல் செய்யப்படவுள்ள சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தில், சம்பந்தப்பட்ட சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு, பொதுப்பணித் துறை, நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை, கிராமப்புறச் சாலைகள் (PLB) ஆகியவற்றின் கீழ் பராமரிப்புப் பணிகளுக்காக மொத்தம் 184 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான Mega Turapan திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டுப் பணிகள் கிராமப்புறச் சாலைகள் மற்றும் விவசாயப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்காக இந்தோனேசியாவில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பமான Sistem Tetulang Pratuang பயன்படுத்தப்படுகிறது.

மென்மையான கட்டமைப்பைக் கொண்ட நிலப்பரப்புகளில், குறிப்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் சாலை பராமரிப்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள இந்தத் தொழில்நுட்பம் ஏற்றது.

இதனிடையே, சிலாங்கூரில் சாலை பராமரிப்பு பணிகளை மேலும் விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த Asphalt, Reuse & Recycling (AsRR) இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.