ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 — வடிகாலை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்காக, ஜாலான் பெருசாஹான் 1, பத்து கேவ்ஸ் பகுதியிலுள்ள சாலையின் மூடல் காலம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை செலாயாங் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதுடன், தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாலை மூடல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 017-558 8344 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என MPS தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.







