3 மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை எச்சரிக்கை

11 நவம்பர் 2026, 7:47 AM
3 மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை எச்சரிக்கை

ஷா ஆலாம், நவ 11 : கிளந்தான், திராங்கானு மற்றும் சபா ஆகிய மூன்று மாநிலங்களின் சில பகுதிகளில் நாளை (நவம்பர் 12) வரை தொடர் மழை பெய்யக்கூடும் என 'விழிப்புணர்வு' அளவிலான எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

பருவமழை காற்று நாட்டிற்குள் நுழைவதால் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மற்றும் சபாவின் கிழக்குப் பகுதிகளில் தொடர் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அதன் இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கை கிளந்தான் மாநிலத்தின் பாச்சோக், கோத்தா பாரு, தும்பட், பாசிர் மாஸ், பாசிர் பூத்தே, மாச்சாங், தானா மேரா ஆகிய பகுதிகளையும்,

திராங்கானு மாநிலத்தின் பெசுட், செதியூ, கோலா திராங்கானு, கோலா நெருஸ் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது.

மேலும் சபா மாநிலத்தின் கூடாட், பித்தாஸ் மற்றும் பைத்தான் ஆகிய இடங்களும் இதனால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அண்மைய வானிலை தகவல்களை அறிய மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் MetMalaysia அதிகாரப்பூர்வ வலைத்தளம், myCuaca மொபைல் செயலி அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களை நாடலாம்.

கூடுதல் விபரங்களுக்கு 1-300-22-1638 என்ற ஹாட்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.