மதியம் 1 மணி நிலவரம் : சிலாங்கூரில் 6 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசடைவு

29 செப்டெம்பர் 2026, 5:57 AM
மதியம் 1 மணி நிலவரம் : சிலாங்கூரில்  6 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசடைவு
மதியம் 1 மணி நிலவரம் : சிலாங்கூரில்  6 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசடைவு

ஷா ஆலாம், செப் 29 : சிலாங்கூரில் புகைமூட்ட நிலைமை மோசமடைந்துள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி அங்குள்ள அனைத்து ஆறு இடங்களிலும் காற்று மாசடைவு குறியீடு (IPU/API) அளவுகள் காலையோடு ஒப்பிடும்போது அதிகரித்துள்ளன.

மலேசிய காற்று மாசடைவு குறியீடு நிர்வாக அமைப்பின் (APIMS)அகப்பக்க தரவுகளின்படி, ஜோஹான் செத்தியா (Johan Setia) அதிகபட்சமாக 171 குறியீட்டு அளவைப் பதிவு செய்துள்ளது (காலையில் 161 ஆக இருந்தது).

ஷா ஆலாம் (Shah Alam) காலையில் 156 இலிருந்து 167 ஆகவும், கிள்ளான் (Klang) 153 இலிருந்து 162 ஆகவும், பந்திங் (Banting) 150-லிருந்து 159-ஆகவும் உயர்ந்தன.

பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya) காலையில் 116 இலிருந்து 156 ஆகவும், கோலா சிலாங்கூர் (Kuala Selangor) 109 இலிருந்து 156 ஆகவும் கணிசமான உயர்வைப் பதிவு செய்தன.

ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் காலையில் 27 பகுதிகளாக இருந்த ஆரோக்கியமற்ற காற்று மாசடைவுப் பதிவுகள் மதியம் 1 மணி நிலவரப்படி 32 பகுதிகளாக அதிகரித்தன.

நாடு தழுவிய அளவில், சரவாக் மாநிலத்தின் செரியான் (Serian) பகுதி மிக உயர்ந்த API அளவாக 174 -ஐப் பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஜோகூரின் லார்கின் (Larkin - 172), பாசிர் கூடாங் (Pasir Gudang - 172), மலாக்கா மாநகரம் (Bandaraya Melaka - 172) மற்றும் நெகிரி செம்பிலானின் நிலாய் (Nilai - 172) ஆகிய பகுதிகள் உள்ளன.

கிள்ளான் பள்ளத்தாக்கின் மேலும் சில பகுதிகளும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் கோலாலம்பூரின் செராஸ் (Cheras) 167, புத்ராஜெயா (Putrajaya) 163 மற்றும் பத்து மூடா (Batu Muda) 154 ஆகிய API அளவுகளைப் பதிவு செய்துள்ளன.

மறுபுறம், 30 பகுதிகள் மிதமான அளவிலான API பதிவையும், ஆறு பகுதிகள் நல்ல காற்றின் தரத்தையும் கொண்டுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.