நஜீப் வீட்டுக் காவல் செல்லும் வரையில் நான் பதவியில் இருப்பேன்: அந்தோணி லோக்

29 செப்டெம்பர் 2026, 5:00 AM
நஜீப் வீட்டுக் காவல் செல்லும் வரையில்  நான் பதவியில் இருப்பேன்: அந்தோணி லோக்

கோலாலம்பூர், செப் 29 - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடங்கும் வரையில், தாம் போக்குவரத்து அமைச்சராக பதவியில் இருக்கப் போவதாக , அந்தோணி லோக் தெரிவித்தார்.

மேலும், தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வழங்கி விட்டதாக அவர் கூறினார்.

" பதவி விலகல் கடிதத்தை வழங்கியபோதும் தற்போதைக்கு எனது பொறுப்புகளைத் தொடருமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

எனினும் ஒரு கால கட்டத்தை வரையறுப்பது அவசியம் என்றேன். அதனால், நஜீப் வீட்டுக் காவலுக்கு செல்லும்போது, எனது பதவி விலகல் நடப்புக்கு வரும் " என லோக் கூறினார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில், 2026 மலேசிய கடற்படை வாரத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, தமது பதவி விலகல் கட்சியின் முடிவாகும்.

எஞ்சிய சிறை காலத்தை நஜீப் வீட்டுக் காவல் மூலம் அனுபவிக்க வழங்கப்பட்ட பொது மன்னிப்பை டிஎபி கட்சி ஏற்கவில்லை. அதையடுத்து தமது பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் தலைமைச் செயலாளருமான லோக் தெளிவுப்படுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.