பதவி விலக முன்வந்துள்ள லோக்குடன் விரைவில் சந்திப்பு : அன்வார்

20 செப்டெம்பர் 2026, 1:10 PM
பதவி விலக முன்வந்துள்ள லோக்குடன் விரைவில் சந்திப்பு : அன்வார்

ஷா ஆலாம், செப் 20 - பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டிஎபி தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்கை விரைவில் சந்திக்கவிருக்கிறார்.

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலக முன் வந்திருப்பது தொடர்பில் எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்பாக, லோக்கின் கருத்தைக் கேட்டறிவதற்காக அவரை சந்திக்கவிருப்பதாக பிரதமர் கூறினார்.

பதவி விலக முன் வந்திருப்பது குறித்து லோக் என்னிடம் தெரிவித்திருக்கிறார். முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த முடிவை எடுத்திருப்பதாக தாம் அறிவதாகவும் அன்வார் கூறினார்.

" அவர் என்னிடம் தெரிவித்து விட்டார். ஆனால் அது குறித்து எதுவும் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு உறுதியான கொள்கை உள்ளது. ஊழலை ஒழிப்பதில் தளர்வோ பலவீனமோ இருப்பதைக் காட்டும் செயலை அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்" என அவர் கூறினார்.

நானும், லோக்கும் சீனா, ஷங்காய்-யில் இருந்து திரும்பியப் பின்னர் அந்த சந்திப்பு நடத்தப்படலாமென அன்வார் குறிப்பிட்டார்.

இன்று இங்கு, சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் புரட்சி முன்னோடிகளுடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.