கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் புகைமூட்டம்: ஆரோக்கியமற்ற காற்றுத் தரம்

29 செப்டெம்பர் 2026, 2:31 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் புகைமூட்டம்: ஆரோக்கியமற்ற காற்றுத் தரம்

ஷா ஆலாம், செப் 29 - இந்தோனேசியாவின் கலிமந்தானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் உண்டான புகைமூட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கிற்குத் திரும்பியதை அடுத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டு (API) அளவுகள் பதிவாகின.

சிலாங்கூரில், அதிகபட்ச API அளவு ஜோஹான் செத்தியாவில் 161 ஆகப் பதிவாகியது.

இதனைத் தொடர்ந்து ஷா ஆலாம் (156), கிள்ளான் (153), பந்திங் (150), பெட்டாலிங் ஜெயா (116) மற்றும் கோலா சிலாங்கூர் (109) ஆகிய இடங்கள் உள்ளன.

கோலாலம்பூரில் உள்ள பத்து மூடா (Batu Muda) 100 என்ற API அளவைப் பதிவு செய்து ஆரோக்கியமற்ற நிலைக்கு ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இருந்த நிலையில், சேராஸ் (158) மற்றும் புத்ராஜெயாவிலும் (154) காற்று தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தது.

நாடு முழுவதும் மொத்தம் 27 பகுதிகள் ஆரோக்கியமற்ற API அளவுகளைப் பதிவு செய்துள்ளன.

இதில் மிக அதிகபட்சமாகச் சரவாக்கின் செரியான் பகுதியில் 174-ஆக பதிவாகியுள்ளது. சரவாக்கின் பிற பகுதிகளான சமரஹான் (160), கூச்சிங் (158) மற்றும் ஸ்ரீ அமான் (133) ஆகிய இடங்களிலும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தது.

மேற்கு மலேசியாவில், தெற்கு மாநிலங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

ஜொகூரின் பாசிர் கூடாங்கில் 169, லார்க்கினில் 168, பத்து பகாட்டில் 161, பெங்கராங் மற்றும் கோத்தா திங்கியில் 159, தங்காக்கில் 157, செகாமட்டில் 153 மற்றும் குளுவாங்கில் 142 என்ற அளவில் API பதிவாகியிருந்தது.

நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களிலும் ஆரோக்கியமற்ற காற்று தரம் பதிவாகியுள்ளது.

நிலாய் (164), மலாக்கா நகரம் (164), புக்கிட் ரம்பாய் (161), போர்ட் டிக்சன் (155), அலோர் காஜா (153), சிரம்பான் (152) மற்றும் ரொம்பின் (152) ஆகிய இடங்கள் இதில் அடங்கும்.

தீபகற்பத்தின் வடக்கு பகுதியிலும், கிழக்கு மலேசியாவின் சில பகுதிகளிலும் காற்று தரம் மிதமான அளவில் நீடித்தது.

இப்பகுதிகளில் உள்ள ஏழு இடங்களில் நல்ல காற்று தரம் (API) பதிவாகியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.