கோலா லங்காடில் கடல் பெருக்கு; பேரிடர் நிர்வாகக் குழு தயார்

28 செப்டெம்பர் 2026, 8:39 AM
கோலா லங்காடில் கடல் பெருக்கு; பேரிடர் நிர்வாகக் குழு தயார்

ஷா ஆலாம், செப். 28 – கடல் பெருக்கு ஏற்படும் சாத்தியம் உள்ளதால் கோலா லங்காட் மாவட்டப் பேரிடர் நிர்வாகக் குழு (JPBD) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

One Phantom Bank நிலையத்தில் கடல் நீர்மட்டம் நாளை காலை 6.54 மணியளவில் அதிகபட்சமாக 5.4 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுதாகக் கோலா லங்காட் மாவட்ட நில அலுவலகம் (PDT) தெரிவித்தது.

அதேவேளையில், புதன்கிழமை காலை 7.27 மணியளவில் கடல் நீர்மட்டம் 5.3 மீட்டர் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடல் பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

குறிப்பாக, அபாயம் அதிகம் உள்ள ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், கடலோரத் தடுப்பணைகள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு அமைப்புகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளன.

இதனிடையே, கடல் பெருக்கு ஏற்படக்கூடிய சூழலை எதிர்கொள்ள பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என கோலாலங்காட் மாவட்ட நில அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.