கோலாலம்பூர், செப். 28 – மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் உடல் இன்று காலை 10.48 மணியளவில் IJN-லிருந்து செரி கெம்பாங்கான், The Mines-இல் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும் IJN நுழைவாயிலில் போலீசார் மற்றும் IJN பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஊடகப் பிரதிநிதிகளும் IJN வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இந்நிலையில், துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் மறைவு தொடர்பாக IJN இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.







