புத்ராஜெயா, செப். 28 – இன்று காலை தேசிய இருதயக் கழகம், IJN-ல் காலமான துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் மற்றும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ மாலேக் ரசாக் சுலைமான் ஆகியோருக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகளுக்கு உதவுமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாகத் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் மறைவையொட்டி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பிரதமர் அன்வார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இதனிடையே, துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் மறைவையால் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் தங்களது நிகழ்ச்சிகளை மிதமாகவும் பொருத்தமான வகையிலும் மாற்றியமைக்க வேண்டும் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக்கொண்டார்.






