துன் டாக்டர் சித்தி ஹஸ்மா 100-வது வயதில் காலமானார்

28 செப்டெம்பர் 2026, 2:39 AM
துன் டாக்டர் சித்தி ஹஸ்மா 100-வது வயதில் காலமானார்

பெட்டாலிங் ஜெயா, செப்.28: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியாரும், நாட்டின் முன்னோடி மலாய் பெண் மருத்துவர்களில் ஒருவருமான துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி தனது 100ஆவது வயதில் தேசிய இருதய கழக மருத்துவமனையில் (IJN) இன்று காலமானார்.

1926ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி சிலாங்கூர், கிள்ளானில் பிறந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா, மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பணித் துறைகளில் நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள King Edward VII College of Medicine-இல் மருத்துவம் பயின்ற அவர், 1955ஆம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார்.

பின்னர் சுகாதார அமைச்சில் இணைந்த அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.

குறிப்பாக பொது சுகாதாரம், தாய் மற்றும் குழந்தை நலப் பராமரிப்பு ஆகிய துறைகளில் அவர் தனது பணிக்காலத்தில் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.

துன் டாக்டர் சித்தி ஹஸ்மா, 1956ஆம் ஆண்டு துன் டாக்டர் மகாதீர் முகமதுவைத் திருமணம் செய்துகொண்டார்.

இத்தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான மரினா மகாதீர் மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் அடங்குவர்.

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் நீண்டகாலம் சேவையாற்றிய துன் டாக்டர் சித்தி ஹஸ்மா, மலேசியாவின் ஆரம்பகால மலாய் பெண் மருத்துவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.