கோலாலம்பூர், செப். 28 – துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் மறைவுக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சாரித் சோஃபியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் குடும்பத்தினருக்கு இத்துயரமான இழப்பை எதிர்கொள்ள வலிமை, மன உறுதி மற்றும் பொறுமையை இறைவன் வழங்க வேண்டும் என்றும் மாமன்னரும் பேரரசியாரும் பிரார்த்தித்தனர்.
இதனிடையே, துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு சமூகத்துக்கும் நாட்டுக்கும் பேரிழப்பாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
துன் டாக்டர் சித்தி ஹஸ்மா இன்று காலை தேசிய இருதயக் கழகமான IJN-ல் தனது 100ஆவது வயதில் காலமானார்.







