காப்பார் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வாகனங்கள் தீக்கிரை

28 செப்டெம்பர் 2026, 3:50 AM
காப்பார் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வாகனங்கள் தீக்கிரை

ஷா ஆலாம், செப். 28 – இன்று அதிகாலை காப்பார், மேரு இம்பியான் அடுக்குமாடி குடியிருப்பின் B பிளாக்கில் இரண்டு கார்கள் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரையாகின.

அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் Proton Exora பல்நோக்கு வாகனம் 80 விழுக்காடு சேதமடைந்ததுடன், Toyota Vios கார் 60 விழுக்காடு தீக்கிரையானது. Yamaha Avantiz ரக மோட்டார் சைக்கிள் 30 விழுக்காடு சேதமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தெரிவித்துள்ளது.

அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என சிலாங்கூர் JBPM நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெஸால் அஸ்பார் கூறினார்.

காலை 5.50 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை காலை 6.20 மணியளவில் நிறைவடைந்ததுடன், இச்சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ தகவல் இல்லை.

இதனிடையே, தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.