இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார்

27 ஜூன் 2026, 9:40 AM
இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.பாக்யராஜ் இன்று காலமானார்.

மாரடைப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தனது 73-வது வயதில் காலமானார்.

அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

1980- களின் திரைக்கதை மன்னன் என்று திரையுலகினரால் போற்றப்படும் கே.பாக்யராஜ், நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமையைக் கொண்டவர்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்த அவர் புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

கதாநாயகனாக வெற்றிப் பெற்றப் பின்னர், சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுத்தார்.

அவர் இயக்கிய மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு என அவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த கே.பாக்யராஜ் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்.

1981-இல் நடிகை பிரவீணாவை மணந்த அவர், பிரவீணாவின் மறைவுக்குப் பின்னர், அப்போது முன்னனி கதாநாயகியாக இருந்த பூர்ணிமாவைத் திருமணம் செய்தார்.

அவர்களுக்கு மகள் சரண்யா, மகன் சாந்தனு ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

பாக்யராஜின் இந்த மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரை பிரபலங்களும், தலைவர்களும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.