மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க சிலாங்கூர் அரசுக்கு கோரிக்கை

28 செப்டெம்பர் 2026, 2:12 AM
மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க சிலாங்கூர் அரசுக்கு கோரிக்கை

ஷா ஆலம், செப். 28 – ஓய்வுபெற்ற நிலையிலும் தொடர்ந்து பணியாற்றும் திறனும் விருப்பமும் கொண்ட மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க சிலாங்கூர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள்தொகையில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்றவர்கள் பலர் அரசாங்க உதவியைச் சார்ந்திருக்காமல் தங்களது சொந்த வருமானத்தின் மூலம் தொடர்ந்து சுயமாக வாழ விரும்புவதாக டோனி லியோங் துக் சீ குறிப்பிட்டார்.

மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது, அவர்களுக்கு வெறுமனே பண உதவிகளை வழங்குவதைக் காட்டிலும் நீண்டகால அடிப்படையில் நிலையான அணுகுமுறையாக அமையும்.

அதேவேளையில், 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவுசெலவுத் திட்டத்திலும் மக்களின் நலன்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக கல்வி, உதவி தேவைப்படும் மக்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, 2026ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், ‘Skim Mesra Usia Emas’ (SMUE) திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு 55 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியிருந்தது.

SMUE திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் 150 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.