சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் மூத்த குடிமக்களின் உடற்தகுதியை மதிப்பிடும் சிலாங்கூர் அரசு

20 அக்டோபர் 2026, 6:36 AM
சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் மூத்த குடிமக்களின் உடற்தகுதியை மதிப்பிடும் சிலாங்கூர் அரசு

ஷா ஆலம், அக். 20 – சிலாங்கூரில் மூத்த குடிமக்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்காக, ஒரு நிமிடத்தில் நடக்கக்கூடிய தூரம் மற்றும் கைகளால் பொருட்களைப் பற்றிப்பிடிக்கும் வலிமை உள்ளிட்ட அம்சங்கள் சுகாதாரப் பரிசோதனையில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

மூத்த குடிமக்கள் அதிகரித்து வரும் சமூகச் சூழலில், அவர்களின் உடல்நலத்தையும் உடல் செயல்திறனையும் மதிப்பிடுவதற்கு வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளிலிருந்து மாறுபட்ட அணுகுமுறை அவசியம் எனச் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சுகாதாரப் பரிசோதனைகள், பொதுமக்களின் ஆரம்பகட்ட உடல்நிலையை அறிந்துகொள்வதற்கான அடிப்படை முயற்சி என்று கூறிய அமிருடின், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெறுவதற்கும் இத்தகைய பரிசோதனைகள் உதவுவதாகத் தெரிவித்தார்.

அந்த வகையில், இவ்வாண்டு சிலாங்கூர் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச சுகாதாரப் பரிசோதனைகளை நடத்தி, குறைந்தது 8,000 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்வதை மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், பொதுமக்கள் ஆண்டுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே மாநில அரசு நிர்ணயித்துள்ள எளிய நிபந்தனை என்றும் அமிருடின் தெரிவித்தார்.

இலவச சுகாதாரப் பரிசோதனைகளின் மூலம் அடிக்கடி கண்டறியப்படும் உடல்நலப் பிரச்சனைகளில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் அளவு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவை அடங்குகின்றன.

இதனுடன், புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் கண்டறிவதற்கும் பரிசோதனைகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த இலவச சுகாதாரப் பரிசோதனை முன்னெடுப்பைச் செயல்படுத்துவதற்காக, சிலாங்கூர் மாநில அரசு 2026ஆம் ஆண்டுக்கான மாநில வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

இலவச சுகாதாரப் பரிசோதனையைப் பெற விரும்பும் பொதுமக்கள், SELangkah செயலி மூலம் தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.