முதியவர் கொலை வழக்கு-குடும்ப உறுப்பினர்கள் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

16 நவம்பர் 2026, 10:00 AM
முதியவர் கொலை வழக்கு-குடும்ப உறுப்பினர்கள் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஷா ஆலாம், நவ.16: கடந்த நவம்பர் 4-ஆம் தேதி 60 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்று குடும்ப உறுப்பினர்களில் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ள இருவரும் ஓர் ஆணும் பெண்ணும் ஆவர். அவர்கள் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302 மற்றும் பிரிவு 34இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மட் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்த துணை அரசு வழக்கறிஞர், இருவருக்கும் எதிராகக் கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது பெண் சந்தேக நபர் அரசுத் தரப்பு சாட்சியாகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அல்ஸாஃப்னி தெரிவித்தார்.

இத்தகவல்களை அவர் இன்று செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதாக KOSMO! ONLINE செய்தி வெளியிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.