சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

26 செப்டெம்பர் 2026, 7:57 AM
சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், செப்.26 – இன்று மாலை 5 மணி வரை சிலாங்கூரில் கிள்ளான், கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்னாம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரித்துள்ளது.

பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலம் முழுவதும் இதேபோன்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை ஏற்படக்கூடும்.

பொதுமக்கள் தற்போதைய வானிலை நிலவரம் மற்றும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை அறிந்து கொள்வதற்காக மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் myCuaca செயலியைப் நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.