ஷா ஆலம், செப். 28 – சுங்கை பெசாரில் மேற்கொள்ளப்பட்ட ‘Operasi Bersih’ தூய்மை சோதனை நடவடிக்கையில் இரண்டு உணவகங்களை 14 நாட்களுக்கு மூட சபாக் பெர்ணாம் ஊராட்சி மன்றம் (MDSB) உத்தரவிட்டுள்ளது.
அந்த உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை மீறியதால் சபாக் பெர்ணாம் ஊராட்சி மன்ற உணவகச் சட்டம் 2007-ன் கீழ் இந்த மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே நடவடிக்கையின்போது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட சில உணவகங்களளுக்கு ஒன்பது அபராதங்கள் விதிக்கப்பட்டன.
சபாக் பெர்ணாம் மாவட்ட அளவிலான ‘Hari Cuci Malaysia’ தூய்மை தினத்தை முன்னிட்டு இந்த ‘Operasi Bersih’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
MDSB-யின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் துறை, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை நடத்தின.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க உணவகங்களில் தொடர்ந்து சோதனைகள் மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் MDSB உறுதியளித்துள்ளது.







