கெனின்காவில் மிதமான நிலநடுக்கம்; 3.4 ரிக்டர் பதிவு

3 செப்டெம்பர் 2026, 4:38 AM
கெனின்காவில் மிதமான நிலநடுக்கம்; 3.4 ரிக்டர் பதிவு

ஷா ஆலம், செப். 3: சபா, கெனிங்காவுக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 9.31 மணியளவில் 3.4 ரிக்டர் அளவிலான மித்மான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கெனிங்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்துக்குப் பின்னர் நிலைமையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவ்வப்போது நிலவரம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.