கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்று மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை, MetMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாபுவான் கூட்டாட்சிப் பிரதேசத்திலும் இதே வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான், கூலாய், ஜோகூர் பாரு மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்கள் இந்த வானிலை எச்சரிக்கையின் கீழ் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், சபா மற்றும் சரவாக்கில் பல பகுதிகளிலும் இதேபோன்ற மோசமான வானிலை நிலவக்கூடும் என MetMalaysia தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், குறிப்பாக தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.






