அதிக பணிச்சுமையால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவு – அமிருடின்

26 செப்டெம்பர் 2026, 2:47 AM
அதிக பணிச்சுமையால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவு – அமிருடின்

ஷா ஆலாம், செப் 26 – சிலாங்கூர் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் பணிச்சுமையால் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தலையீட்டு ஆதரவை வழங்க மாநில அரசாங்கம் தயாராக உள்ளது.

இதனை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் முன்னணியில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் செவிலியர்களின் நலனைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் பொதுச் சுகாதார சேவை முறையின் தொடர்ச்சியான செயல்திறனை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

சுகாதாரப் பணியாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மனநலப் பரிசோதனை மற்றும் நலன்புரி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை ஒருங்கிணைத்து வழங்க முடியும் என அமிருடின் தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாநில அரசாங்கம் உதவ விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்களில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையும் ஒன்றாகும் என்றும், குறிப்பாக செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

செவிலியர்கள் இல்லாமல் மருத்துவக் குழுக்களின் செயல்பாடுகள் முழுமையானதாக இருக்காது என்பதால், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என்றும் அமிருடின் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இருந்தாலும், சிலாங்கூரில் பொதுச் சுகாதார சேவைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மாநில அரசாங்கமும் பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார்.

அதேவேளையில், சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைத்து, மக்களுக்கான பொதுச் சுகாதார சேவைகளை மேலும் திறமையாக வழங்குவதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவது சிலாங்கூர் மாநில அரசாங்கம் எதிர்கொள்ளும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.